இடுகைகள்

தென்னிலை கதிர் ஆசிரியர் மீது பொய் புகார் அளித்த நிருபர்களுக்கு தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜி ஜி சிவா கண்டனம்.

படம்
தென்னிலை கதிர் ஆசிரியர் மீது பொய் புகார் அளித்த கட்டிங், வசூல் பத்திரிகையாளர்களுக்கு தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜி ஜி சிவா கண்டனம். தேசிய முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை கூறியிருப்பதாவது, ஊத்தங்கரையில் இயங்கி வரும் RD அக்ரோவைப் பற்றி தென்னிலை கதிர் பத்திரிகை அந்நிறுவனத்தில் நடக்கும் குறைபாடுகளை போஸ்டர் மூலமாகவும்,நேரடியாக மக்களின் குறைகளை கேட்டு தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்திருக்கிறது. அக்ரோ நிறுவனத்தில் அங்கே வாழக்கூடிய மக்களுக்கு எதிராக பல அநீதிகளை இழுந்து வந்ததும் அந்நிறுவனத்தால் பொதுமக்களுக்கு பேராபத்து ஏற்படக் கூடிய வகையில் இருப்பதனாலும் தென்னிலை கதிரின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளர் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து மக்கள் பணி செய்து வரும் தமிழன் வடிவேல் அவர்கள் மீது உள்ளூரில் உள்ள சில பத்திரிகையாளர்கள் என்கின்ற போர்வையில் பயணிக்கும் ஒரு சாராரின் உண்மை நிலவரங்களை மக்கள் மத்தியில் கொண்டு வந்த தென்னிலை கதிர் பத்திரிகையின் செயல்பாடுகளை தாங்கிக்கொள்ள முடியாத பண முதலை படைத்த கோபி என்பவர் மாதம் மாதம் கட்டிங் கொடுக்க...

தென்னிலை கதிர் செய்தியால் மாதமாதம் மாமூல் போச்சேன்னு புகார் கொடுத்த ஊத்தங்கரை நிருபர்கள்....?

படம்
தென்னிலை கதிர் செய்தியால் மாதமாதம் மாமூல் போச்சேன்னு புகார்  கொடுத்த ஊத்தங்கரை நிருபர்கள்....? எத்தனையோ நிருபர்கள் இருக்கும்போது உங்களுக்கு மட்டும் ஏன் எரியுது...? கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கீழ்குப்பம் ஊராட்சியில் இயங்கி வரும் RD அக்ரோ நிறுவனத்தை பற்றி செய்திகள் வெளியிட்டு வந்தோம், வருகிறோம். அந்த செய்தியில் RD அக்ரோ நிறுவனத்தை பற்றியும் அங்கே சிலர் நிருபர்கள் மாதமாதம் மாமூல் வாங்கி வந்ததாகவும் கூறிப்பிட்டு இருந்தோம், அதில் எந்த நிருபர்கள் என்று பெயரும், நிறுவனமும் குறிப்பிடவில்லை. ஆனால் தினமணியில் நிருபராக பணியாற்றி வரும் கட்டிங் பழனி என்பவர் தவளை தானாக முன்வந்து செய்திக்கு சம்பந்தமே இல்லாமல் தென்னிலை கதிர் மீதும், ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க கூறி சிலரை கட்டாயப்படுத்தி அழைத்து சென்று ஊத்தங்கரை காவல்துணை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் தென்னிலை கதிர் செய்திதான் வெளியிட்டது, யாரையும் தொடர்பு கொண்டு பேசியது கூட இல்லை. செய்தி வெளியிட்டதற்கு நீதிமன்றம்தான் செல்ல வேண்டுமே தவிர காவல் நிலையத்தில...

ஆண்டவன் பெயரை வைத்து அடாவடி வசூலில் ஈடுபடும் நகராட்சி ஆணையர்...!சிறுகடை வியாபாரிகளின் வயிற்றில் அடித்து வசூல் வேட்டை செய்து வரும் மோகன் ராஜ்...!!நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்...??

படம்

கரூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்....!! வெறிச்சோடி காணப்பட்ட இருக்கைகள்....!!

படம்

உதயநிதியின் மாஸ்டர் பிளான்...!ஆட்டம் காணும் அறிவாலயம்....!!திமுகவில் வெடிக்கும் பஞ்சாயத்து....!

படம்

காப்பகத்தில் 9 வயது சிறுமியை மாறி, மாறி சீரழித்த மிருகங்கள்....!ஆண் மற்றும் பெண் வார்டன் கைது....!!

படம்

அரசு பள்ளியில் சாணி பவுடர் குடித்த 3 மாணவிகள்...!ஆசிரியர்கள் திட்டியதால் விபரீத முடிவு...!!பொள்ளாச்சியில் அதிர்ச்சி...!!!

படம்

50 பேரின் பெயரை உடனே சொல்லனும் இல்லன்னா நடிகர் விஜயை சவுக்கால் அடிப்பேன்....!திமுக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு...!!அதிர்ச்சியில் தவெகவினர்....!!!

படம்

பாமக இளைஞர் அணி துணைச் செயலாளர் R. அசோகன் திடீர் விலகல்...!

படம்
  பாமகவுக்கு ஷாக்...! இளைஞர் அணி துணைச் செயலாளர் R. அசோகன் திடீர் விலகல்...! திமுகவில் 50-க்கும் மேற்பட்டோருடன் ஐக்கியம்....!!! பாமக கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே தன்னுடைய மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றசாட்டுகளை முன்வைத்ததோடு அவர் தன்னுடைய தாயை கூட அடிக்க துணிந்தவர் என்று கூறியுள்ளார் . நேற்று(05-06-2025) அன்புமணி மற்றும் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது . இதற்கிடையில் பாமக கட்சியின் தலைவர் நான் தான் என ராமதாஸ் கூறும் நிலையில் அன்புமணியோ நான்தான் கட்சியின் தலைவர் என்கிறார். இதன் காரணமாக தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது பாமக கட்சியின் இளைஞர் அணி துணைச் செயலாளர் ஆர் அசோகன் திடீரென பாமக கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் பர்கூர் திமுக எம்எல்ஏ மதியழகன் தலைமையில் திமுகவில் தற்போது இணைந்தார். அதோடு 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். வருக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும் த...

குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு..? இரவு 11 மணிக்கு டேங்க் மீது 2 பேர்.....!

படம்
  திருப்பூரில் அடுத்த அதிர்ச்சி..! குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு..? இரவு 11 மணிக்கு டேங்க் மீது 2 பேர்.....! திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 6வது வார்டு கவுண்டநாயக்கன்பாளையத்தில் 17.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்ததாக வந்த தகவலால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் காட்டுத்தீயாய் பரவியதால், ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்துவிட்டனர்.. இதையடுத்து, அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள் . திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டு கவுண்டன்நாயக்கன்பாளையம் பகுதியில், 17 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 அடி உயர குடிநீர் தொட்டி கட்டப்பட்டு, பயன்பாட்டிலும் இருந்து வருகிறது. இங்கு 2 காவலாளிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.. திருப்பூர் மாநகராட்சி சார்பில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் இந்த குடிதொட்டி கட்டப்பட்டது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு தொட்டியின் உச்சியில் சிலர் உட்கார்ந்திருந்தனர்.. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்களில் சிலர், தொட்டியின் மேல் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்ப...

சென்னையில் 13 வயது சிறுமியிடம் காவலர் அத்துமீறிய கொடுமை..! போலீஸ் கார், பூத்தில் நடந்த துயரம்...!

படம்
  சென்னையில் 13 வயது சிறுமியிடம் காவலர் அத்துமீறிய கொடுமை..! போலீஸ் கார், பூத்தில் நடந்த துயரம்...! சென்னையில் உள்ள ஐஸ்ஹவுஸ் பகுதியில் 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால் பதறிப்போன பெற்றோர், சிறுமியை கண்டறிந்து தரக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரை ஏற்ற காவல்துறையினர், சிறுமி மாயமானது குறித்து விசாரித்து அவரை மீட்டனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் சிறுமியின் 16 வயது ஆண் நண்பர், ஆண் நண்பரின் தாய் என 2 பேர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காவல் உதவி மையத்தில் வைத்து சீண்டல் இதனிடையே, சிறுமி அளித்த அதிர்ச்சி தகவல் ஒன்று அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தந்தது. அதாவது, 13 வயது சிறுமி வீட்டில் இருந்து வெளியேறி, பட்டினப்பாக்கம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு நள்ளிரவு நேரத்தில், காவல் வாகனம் ஒன்று இருந்தது. அங்கிருந்த அதிகாரியிடம் வீட்டிற்கு செல்ல உதவி கேட்டுள்ளார்.அப்போது, பணியில் இருந்த காவல் வாகன ஓட்டுநரான காவலர் ராமன், சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து அவரை பட்டினப்பாக்கம் காவல் உதவி மை...

ஆண்டாள் கோவிலில் அவமதிப்பு...!!

படம்
  ஆண்டாள் கோவிலில் அவமதிப்பு; தீண்டாமை கொடுமையால் வெளியேற்றப்பட்ட இளையராஜா....! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜா வெளியிட்ட ஆல்பமான திவ்ய பாசுரங்கள் இசைக்கப்பட்டு 15ஆம் தேதி மாலை நாட்டியாஞ்சலி நடைபெற்றது. ராமானுஜ ஜீயர் மற்றும் சடகோப ராமானுஜ ஜீயர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இளையராஜா சென்றிருந்தார். சிறப்பாக வரவேற்று, மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி, இளையராஜாவுக்கு தடபுடலாக மரியாதை செய்தனர். நிகழ்ச்சி மேடையில் இளையராஜா ஏறியபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. எல்லாம் சரியாக நடந்த நிலையில், ஆன்மிகச் சிலிர்ப்பு மேலிட, ஜீயர்கள் மற்றும் அய்யங்கார்களுடன் ஆண்டாள் கோவிலுக்குள் இளையராஜா சென்றார். அப்போது கருவறை என்று சொல்லப்படும் மூலஸ்தானத்துக்கு முன்பாக உள்ள அர்த்தமண்டபத்துக்குள் அவர்களுடன் சென்றுவிட்டார். ஆனால் உடனே அவர் தடுக்கப்பட்டு அர்த்தமண்டபத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். வாடிய முகத்துடன் அர்த்தமண்டபத்தில் இருந்து வெளியேறிய இளையராஜா, பக்தர்களுடன் பக்தர்களாக வாசலில் இன்று வணங்கினார். இந்தியாவில் விவிஐபியாக இருந்தாலும், அர்த்தமண்டபம் வரை செல்வதற்கு வர்ண...

லஞ்ச வேட்டையில் சிக்கிய மாமன்னன் ஜஹாங்கிர்க்கு உடனடி பணி..!!

படம்
  லஞ்சத்தில் சிக்கிய ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாஷாவை பத்தே நாட்களில் பதவி போட்டது ஏன்....? ஊட்டி நகராட்சி ஆணையராக இருந்த லஞ்ச மன்னன் ஜஹாங்கிர் பாஷா காரில் செல்லும்போது லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்து அவரிடம் இருந்து 11 லட்சத்து 70 ஆயிரம் லஞ்ச பணத்தை கைப்பற்றியது. அப்படி கையும் கலுவுமாக பிடிபட்ட ஜஹாங்கிர் பாஷாவை நகராட்சி நிர்வாக ஆணையர் சிவராசு ஐஏஎஸ் அவர்கள் 13 ம் தேதி ஜஹாங்கிர் பாஷாவை ஊட்டி நகராட்சியில் இருந்து காத்திருப்பு பட்டியலுக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் 10 நாட்கள் முடிந்த நிலையில் நேற்று (26-11-2024) அன்று ஜஹாங்கிர் பாஷாவை திருநெல்வேலி மாநகராட்சிக்கு பணியிட உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். லஞ்சம் வாங்கி சிக்கிய ஜஹாங்கிர் பாஷாவை 20 நாட்கள் கூட முடியாத நிலையில் உடனடியாக உத்தரவு பிறப்பித்ததால் இதுதான் துறை ரீதியான நடவடிக்கையா என்கின்றனர் மக்கள். உடனடியாக பணி அமர்த்தப்பட்ட லஞ்ச வேட்டை மாமன்னன் ஜஹாங்கிர்க்கு அரசியல் ரீதியாக பல்வேறு அமைச்சர்கள் கையில் இருப்பதை உணர முடிகிறது. துறை ரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் குறுகிய நாட்களிலே பணி மாறுதல் மட்டும் அளித்தால் ...

ஜாமீனில் வந்த வேகத்தில் கெத்தாக அமைச்சராகும் செந்தில் பாலாஜி.....?

படம்
  ஜாமீனில் வந்த வேகத்தில் கெத்தாக அமைச்சராகும் செந்தில் பாலாஜி.....? செந்தில் பாலாஜிக்கு ஜாமிமீன் கிடைத்ததைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது.உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் செந்தில் பாலாஜிக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்படவுள்ளது. அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தது.அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது இருதயப்பகுதியில் அடைப்பு இருந்ததையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடல் நிலை சீரானதையடுத்து புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். அப்போது அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநர் ரவி தமிழக முதலமைச்சருக்கு உத்தரவிட்டார். ஆனால் அமைச்சரவையை மாற்றுவதும் தன்னுடைய அதிகாரம் என முதலமைச்சர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆளுநர் ரவியே தனிப்பட்ட முறையில் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜ...

மேயர் பிரியாவுக்கு 'டஃப்' கொடுத்து வந்த 'டபேதார்' அதிரடி இட மாற்றம்.....!

படம்
  லிப்ஸ்டிக் காரணமா...;மேயர் பிரியாவுக்கு 'டஃப்' கொடுத்து வந்த 'டபேதார்' அதிரடி இட மாற்றம்.....!  சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதாராக மாதவி என்பவர் முதன்முறையக நியமிக்கப்பட்டார். அதாவது, சென்னை மாநகராட்சி மேயராக பிரியா தேர்ந்தெடுக்கப்பட்ட போது முதல் பெண் தபேதாரராக மாதவி என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் திடீரென அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. மேயருக்கு முன்னே செங்கோலை ஏந்தியும் கூட்ட நெரிசல் இல்லாமல் வழி ஏற்படுத்தி தருவதும் தபேதாரின் பணி. இந்த பணியில் ஈடுபட்டு வந்த மாதவி, மாநகராட்சி மேயர் பிரியாவுடன், மாதவி அரசு விழாக்களில் பங்கேற்பது வழக்கம். மேயரை மிஞ்சும் வகையில் உடை அணிந்து மிடுக்காக கண்கள் மற்றும் உதடுகளில் மை தீட்டி அழகாக வலம் வந்தார். இது சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து, டபேதார் மாதவி உதட்டில் லிப்ஸ்டிக் பூசக்கூடாது, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது உள்பட பல அறிவுரைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த மாதம் நடைபெற்ற அதிகாரபூர்வ நிகழ்வின் போது உதட்டுச்சாயம் அணியக் கூடாது என்ற அறிவுறுத்தல்களுக்கு அவர் கீழ்ப்படியாமல் தன்ன...

பணியிட மாற்றம் கேட்டு வந்த காவலர்...; கிடைக்காததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட காவலர்.....!

படம்
 பணியிட மாற்றம் கேட்டு வந்த காவலர்...; கிடைக்காததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட காவலர்.....! சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் 2-ம் நிலை நுண்ணறிவு காவலராக பணியாற்றி வந்த இசக்கிமுத்துகுமார், குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தனியாக இருந்தபோது உயிரை மாய்த்துக் கொண்டார். பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகன் தந்தை சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். அதன்பின்னரே காவலர் உயிரிழந்த விவகாரம் தெரிய வந்துள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் இசக்கிமுத்துகுமார் (38 வயது). இவர் கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி சங்கரி, மகன்கள் இளமாறன் (14) மற்றும் சஞ்சய் (11) ஆகியோருடன் சென்னை விருகம்பாக்கம், பள்ளிக்கூட தெருவில் வசித்து வந்தார். காவலர் இசக்கிமுத்துகுமார், கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை நுண்ணறிவு போலீஸ்காரராகபணிபுரிந்து வந்தார். தினமும் விருகம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டிற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று மதியம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த காவலர் இசக்...

அமைச்சர் அன்பில் மகேஷ் டோட்டல் பதவியும் க்ளோஸ்....; தஞ்சை குறித்த நேருவின் பேச்சால் பரபரப்பு.....!

படம்
  அமைச்சர் அன்பில் மகேஷ் டோட்டல் பதவியும் க்ளோஸ்....; தஞ்சை குறித்த நேருவின் பேச்சால் பரபரப்பு.....! தமிழர்களின் கட்டிடக்கலை அனைத்தும் பறைசாற்றும் வகையில் தான் இருக்கும். இதற்கெல்லாம் முன்னோடியாக விளங்குவது தஞ்சை பெரிய கோவில்.இதனை இராஜராஜன் சோழன் அவரது ஆட்சியில் கட்டினார். ஆனால் அரசியல் வட்டாரத்தில் இந்த கோவில் பற்றிய ரகசியம் ஒன்று உள்ளது. அரசியல் மற்றும் பிரபலமானவர்கள் யாரேனும் இந்த கோவிலுக்கு சென்றால் அவர்களது உயிரானது பறிபோகிவிடும் என்ற மூட நம்பிக்கையானது தற்பொழுது வரை அவர்கள் மத்தியில் உள்ளது. அந்த வரிசையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கருணாநிதி என ஆரம்பித்து இந்திரா காந்தி வரை அனைவரும் இந்த கோவிலுக்குள் சென்றுள்ளனர். அதன் பின்பு தான் இவர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த கோவிலுக்குள் அரசியல்வாதிகள் செல்வது என்றாலே அவர்களுக்குள் ஒரு பெரிய அச்சம் உள்ளது. அப்படி இருக்கையில் நேற்று தஞ்சை பெரிய கோவிலுக்கு அருகில்உள்ள பூங்காவை திறந்து வைப்பதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் கே என் நேரு உள்ளிட்டோர் சென்றுள்ளனர். மேற்கொண்டு இவர்களுடன் எம் எல் ஏ சந்திரசேகரனும் கலந்து கொண்டார். இந...

பெண் பணியாளர் மீது கொடூர தாக்குதல்..; நிறுவனத்தின் உரிமையாளர் அதிரடியாக கைது....!

படம்
  திருப்பத்தூர் அருகே பெண் பணியாளர் மீது கொடூர தாக்குதல்..; நிறுவனத்தின் உரிமையாளர் அதிரடியாக கைது....!  திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தராபள்ளி பகுதியை சேர்ந்த தங்கவேலு என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன் ( 32 ).இவர் பாலாஜி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் வைத்து வெளிநாட்டுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் வேலூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகள் கடந்த நான்கு ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் வெங்கடேசனின் மகள் மீது கோபாலகிருஷ்ணனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் தன்னுடைய பெற்றோர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். அதற்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோபாலகிருஷ்ணனுக்கு அவருடைய பெற்றோர்கள் வேறொரு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.இந்த நிலையில் வேலூரில் இருந்து அந்தப் பெண் தொடர்ந்து பணிக்கு வந்த நிலையில் நேற்று கோபாலகிருஷ்ணன் அந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியு...

போலி இறப்பு சான்றிதழ் பெற்று கள்ளக்காதலியின் ₹20 கோடி சொத்தை அபகரித்த காதலன்.....!

படம்
  சென்னையில் போலி இறப்பு சான்றிதழ் பெற்று கள்ளக்காதலியின் ₹20 கோடி சொத்தை அபகரித்த காதலன்.....! திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டியை சேர்ந்தவர் லீலாவதி(85).தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று முன்தினம் உறவினர்களுடன் வந்து அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:எனக்கு 2 மகள்கள், 2 மகன்கள். மூத்த மகள் சாந்தி, ஆந்திர மாநிலம், பாகாலாவை சேர்ந்த பாபு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களது காதலை நாங்கள் ஏற்கவில்லை. இதனால் பிழைப்பு தேடி கணவருடன் சென்னைக்கு சென்றார். கோடம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் சாந்தி காப்பாளராக பணியில் சேர்ந்தார். இவர்களுக்கு கிஷோர்குமார் என்ற மகன் உள்ளான். சில ஆண்டுகளில் அந்த விடுதி உரிமையாளர் விடுதியை நடத்த முடியாமல் மூடியுள்ளார். இதனால் சாந்தி என்னிடம் பணத்தை பெற்று விடுதியை வாங்கினார். மேலும்சென்னையில் பல இடங்களில் விடுதி வைத்து நடத்தி வந்தார்.இந்நிலையில் நங்கநல்லூரை சேர்ந்த கிரிராஜ் என்பவரை விடுதியின் மேனேஜராக வேலைக்கு சேர்த்தார். கிரிராஜூக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் ஒரு...

செதில் செதிலா உரிந்த தோல்..; கரண்டியாலேயே "சிறுநீரகத்தை" காலி பண்ண கோவை பெண்.....!

படம்
  செதில் செதிலா உரிந்த தோல்..; கரண்டியாலேயே "சிறுநீரகத்தை" காலி பண்ண கோவை பெண்.....! கோவையில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பதற செய்து வருகிறது.. யாரிந்த பெண்? இவ்வளவு கொடூர மனம் படைத்த தாயும் நம்முடன் வாழ்ந்து வருகிறாரா? கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் மெய்யப்பன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி.. 39 வயதாகிறது.. இவரது மனைவி சாந்தலட்சுமி.. 33 வயதாகிறது.. இந்த தம்பதியின் மகள் அனுஸ்ரீ.. 10 வயதாகிறது. அங்குள்ள பள்ளி ஒன்றில் அனுஸ்ரீ 5ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மே 17ம் தேதி, அனுஸ்ரீ திடீரென கட்டிலில் இருந்து கீழே விழுந்ததாகக்கூறி, பக்கத்திலிருந்த தனியார் மருத்துவமனைக்கு தட்சிணாமூர்த்தி தூக்கி சென்றுள்ளார்.. உடனடி சிகிச்சை அங்கு தரப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி சொல்லியிருக்கிறார்கள்.  பரிசோதனை:-   அதன்படியே, சிறுமியை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்துவிட்டு, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள். இதைக்கேட்டு அதிர்ச்சியில் உடைந்து கதறி அழுதார் தட்சிணாமூர்த்தி.பிறகு ச...