சென்னையில் 13 வயது சிறுமியிடம் காவலர் அத்துமீறிய கொடுமை..! போலீஸ் கார், பூத்தில் நடந்த துயரம்...!

 சென்னையில் 13 வயது சிறுமியிடம் காவலர் அத்துமீறிய கொடுமை..! போலீஸ் கார், பூத்தில் நடந்த துயரம்...!

சென்னையில் உள்ள ஐஸ்ஹவுஸ் பகுதியில் 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால் பதறிப்போன பெற்றோர், சிறுமியை கண்டறிந்து தரக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரை ஏற்ற காவல்துறையினர், சிறுமி மாயமானது குறித்து விசாரித்து அவரை மீட்டனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் சிறுமியின் 16 வயது ஆண் நண்பர், ஆண் நண்பரின் தாய் என 2 பேர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

காவல் உதவி மையத்தில் வைத்து சீண்டல்

இதனிடையே, சிறுமி அளித்த அதிர்ச்சி தகவல் ஒன்று அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தந்தது. அதாவது, 13 வயது சிறுமி வீட்டில் இருந்து வெளியேறி, பட்டினப்பாக்கம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு நள்ளிரவு நேரத்தில், காவல் வாகனம் ஒன்று இருந்தது. அங்கிருந்த அதிகாரியிடம் வீட்டிற்கு செல்ல உதவி கேட்டுள்ளார்.அப்போது, பணியில் இருந்த காவல் வாகன ஓட்டுநரான காவலர் ராமன், சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து அவரை பட்டினப்பாக்கம் காவல் உதவி மையம் உள்ள போலீஸ் பூத்துக்கும், காவல் வாகனத்திலும் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.

போக்ஸோவில் கைது

இதனையடுத்து, சிறுமி அளித்த வாக்குமூலத்தின் பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், காவலர் ராமனுக்கு எதிராக கூறப்பட்ட குற்றசாட்டுகளை உறுதி செய்தனர். இதனால் அவரையும் போக்ஸோவில் கைது செய்து அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். இந்த விஷயம் தொடர்பான விசாரணை தற்போது மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.


                             நிர்வாக ஆசிரியர்.எம்.ராஜ சேகர் 

தென்னிலை கதிர் மாதம்இரு முறைRNI/TNTAM/2022/85265

 
செய்திதாள்கள் மற்றும் தொலைக்காட்சி குழுமம் -thennilaikathir@gmai

                                                    9445272820,7904654776,98847993       


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டாள் கோவிலில் அவமதிப்பு...!!

லஞ்ச வேட்டையில் சிக்கிய மாமன்னன் ஜஹாங்கிர்க்கு உடனடி பணி..!!