செதில் செதிலா உரிந்த தோல்..; கரண்டியாலேயே "சிறுநீரகத்தை" காலி பண்ண கோவை பெண்.....!
செதில் செதிலா உரிந்த தோல்..; கரண்டியாலேயே "சிறுநீரகத்தை" காலி பண்ண கோவை பெண்.....!
கோவையில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பதற செய்து வருகிறது.. யாரிந்த பெண்? இவ்வளவு கொடூர மனம் படைத்த தாயும் நம்முடன் வாழ்ந்து வருகிறாரா?
கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் மெய்யப்பன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி.. 39 வயதாகிறது.. இவரது மனைவி சாந்தலட்சுமி.. 33 வயதாகிறது.. இந்த தம்பதியின் மகள் அனுஸ்ரீ.. 10 வயதாகிறது. அங்குள்ள பள்ளி ஒன்றில் அனுஸ்ரீ 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த மே 17ம் தேதி, அனுஸ்ரீ திடீரென கட்டிலில் இருந்து கீழே விழுந்ததாகக்கூறி, பக்கத்திலிருந்த தனியார் மருத்துவமனைக்கு தட்சிணாமூர்த்தி தூக்கி சென்றுள்ளார்.. உடனடி சிகிச்சை அங்கு தரப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி சொல்லியிருக்கிறார்கள்.
பரிசோதனை:-
அதன்படியே, சிறுமியை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்துவிட்டு, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள். இதைக்கேட்டு அதிர்ச்சியில் உடைந்து கதறி அழுதார் தட்சிணாமூர்த்தி.பிறகு செல்வபுரம் போலீசுக்கு சென்று, மகள் இறந்தது குறித்து புகார் அளித்தார்.போலீசாரும் வழக்கு பதிவு செய்து, குழந்தையின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பினார்கள்.இது தொடர்பான விசாரணையையும் துவங்கினர். அதற்குள் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துவிட்டது. அதை பார்த்ததுமே, போலீசார் மட்டுமல்ல, டாக்டர்களும் சேர்ந்தே அதிர்ச்சி ஆனார்கள்.
உடம்பெல்லாம்:-
சிறுமியின் உடம்பெல்லாம் மொத்தம் 33 காயங்கள் இருந்ததாம். உடம்பில் எப்படி காயங்கள் வந்திருக்கும்? என்று சந்தேகப்பட்டு சிறுமியின் அம்மா சாந்தலட்சுமியிடம் விசாரித்தனர். அப்போதுதான், குழந்தையிலிருந்தே தன் மகளை அடித்து கொடுமைப்படுத்தியது தெரியவந்தது.பிஞ்சு மகளை அடித்து, அடித்து துன்புறுத்தியதே, இந்த மரணத்துக்கும் காரணம் என்றும் தெரியவந்துள்ளது.
போலீஸ் அதிகாரி இதை பற்றி சொல்லும்போது, "அனுஸ்ரீ கெட்டிக்காரப் பெண். படிப்பில் படுசுட்டி.எல்லா பாடத்தையும் நன்றாக படிக்கக்கூடியவள். ஆனாலும், இன்னும் நன்றாக படிக்க வேண்டும் என்று சாந்தலட்சுமி, எப்போது பார்த்தாலும் சிறுமியை கரண்டியால்அடித்துள்ளார். "கரண்டியால் எந்நேரமும் அந்த குழந்தை அடிவாங்கி அழுதுகொண்டேயிருப்பாள்" என்று அக்கம்பக்கத்திலிருப்பவர்களும் உறுதி செய்துள்ளார்கள்.
போஸ்ட் மார்ட்டம்:-
இப்போது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை பார்த்தால், சிறுமியின் உடலில் பல இடங்களில், தசைகள் கன்றி போய் காணப்படுகிறது. நீண்ட காலமாகவே அடித்து வந்ததால், சிறுமிக்கு உள்காயம் ஏற்பட்டு, உடலின் பல்வேறு பகுதிகளில் தசைகள் சிதைந்துள்ளன.
இதனால் ரத்தம் கசிந்து, சிறுநீரக பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. கரண்டியால் அடித்து அடித்தே சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, இதன் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.சம்பந்தப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்றாலும், தமிழக க்கள் இதைக்கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கொடுமை:-
எத்தனையோ தம்பதியினர், பிள்ளை பாக்கியம் கிடைக்காமல் வேதனையிலும், கண்ணீரிலும் தத்தளித்து வருகிறார்கள். இதற்காகவே, கோவில் கோவிலாக சென்று மனமுருகி பிரார்த்தித்தும் வருகிறார்கள். ஆனால், சாந்தலட்சுமி போன்ற பெண்களுக்கு இப்படியொரு குணமா? முகம் தெரியாத அந்நியரையும், வரவேற்று வாழவைக்கும், நம்ம தமிழ்நாட்டில் இப்படியொரு பெண்ணா???
உதவி ஆசிரியர்.எம்.ராஜன்
தென்னிலை கதிர் மாதம்இரு முறை. RNI/TNTAM/2022/85265
9445272820,7904654776,98847993

கருத்துகள்
கருத்துரையிடுக