பெண் பணியாளர் மீது கொடூர தாக்குதல்..; நிறுவனத்தின் உரிமையாளர் அதிரடியாக கைது....!
திருப்பத்தூர் அருகே பெண் பணியாளர் மீது கொடூர தாக்குதல்..; நிறுவனத்தின் உரிமையாளர் அதிரடியாக கைது....!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தராபள்ளி பகுதியை சேர்ந்த தங்கவேலு என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன் ( 32 ).இவர் பாலாஜி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் வைத்து வெளிநாட்டுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் வேலூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகள் கடந்த நான்கு ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் வெங்கடேசனின் மகள் மீது கோபாலகிருஷ்ணனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் தன்னுடைய பெற்றோர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். அதற்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோபாலகிருஷ்ணனுக்கு அவருடைய பெற்றோர்கள் வேறொரு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.இந்த நிலையில் வேலூரில் இருந்து அந்தப் பெண் தொடர்ந்து பணிக்கு வந்த நிலையில் நேற்று கோபாலகிருஷ்ணன் அந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் மற்றும் அவருடைய தந்தை வெங்கடேசன் ஆகியோர் இது குறித்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் கோபாலகிருஷ்ணன் மீது புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீசார் கோபாலகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இணை ஆசிரியர்;பரிமளம் .
தென்னிலை கதிர் மாதம்இரு முறை. RNI/TNTAM/2022/85265
9445272820,7904654776,98847993

கருத்துகள்
கருத்துரையிடுக