பணியிட மாற்றம் கேட்டு வந்த காவலர்...; கிடைக்காததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட காவலர்.....!

 பணியிட மாற்றம் கேட்டு வந்த காவலர்...; கிடைக்காததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட காவலர்.....!

சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் 2-ம் நிலை நுண்ணறிவு காவலராக பணியாற்றி வந்த இசக்கிமுத்துகுமார், குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தனியாக இருந்தபோது உயிரை மாய்த்துக் கொண்டார்.

பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகன் தந்தை சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். அதன்பின்னரே காவலர் உயிரிழந்த விவகாரம் தெரிய வந்துள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் இசக்கிமுத்துகுமார் (38 வயது). இவர் கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி சங்கரி, மகன்கள் இளமாறன் (14) மற்றும் சஞ்சய் (11) ஆகியோருடன் சென்னை விருகம்பாக்கம், பள்ளிக்கூட தெருவில் வசித்து வந்தார். காவலர் இசக்கிமுத்துகுமார், கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை நுண்ணறிவு போலீஸ்காரராகபணிபுரிந்து வந்தார். தினமும் விருகம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டிற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

நேற்று மதியம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த காவலர் இசக்கிமுத்துகுமார், சாப்பிட்டுவிட்டு தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்இந்தநிலையில் மாலையில் பள்ளி முடிந்து அவரது மூத்த மகன் இளமாறன் வீட்டுக்கு வந்தார். அப்போது அறைக்குள் தனது தந்தை இசக்கிமுத்துகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தந்தை சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த விருகம்பாக்கம் போலீசார், இசக்கி முத்துகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இசக்கி முத்துக்குமாரின் மனைவி உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்க நடுவில் அவரது வீட்டில் காவலர் இசச்கிகுமார எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்குமாறு தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது

குடும்ப தகராறு காரணமாக காவலர் தற்கொலை செய்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகபோலீசார் தெரிவித்தனர். எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். 'இதனிடையே ''இசக்கி முத்துக்குமார் வெகு காலமாக பணியிட மாற்றம் கேட்டு வந்ததாகவும்'', அது கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


                         உதவி ஆசிரியர்;சித்ரா குமரேசன்  .

 தென்னிலை கதிர் மாதம்இரு முறைRNI/TNTAM/2022/85265

 
செய்திதாள்கள் மற்றும் தொலைக்காட்சி குழுமம் -thennilaikathir@gmai

                                                    9445272820,7904654776,98847993 

     







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சென்னையில் 13 வயது சிறுமியிடம் காவலர் அத்துமீறிய கொடுமை..! போலீஸ் கார், பூத்தில் நடந்த துயரம்...!

தென்னிலை கதிர் ஆசிரியர் மீது பொய் புகார் அளித்த நிருபர்களுக்கு தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜி ஜி சிவா கண்டனம்.

தென்னிலை கதிர் செய்தியால் மாதமாதம் மாமூல் போச்சேன்னு புகார் கொடுத்த ஊத்தங்கரை நிருபர்கள்....?