பாமக இளைஞர் அணி துணைச் செயலாளர் R. அசோகன் திடீர் விலகல்...!
பாமகவுக்கு ஷாக்...! இளைஞர் அணி துணைச் செயலாளர் R. அசோகன் திடீர் விலகல்...! திமுகவில் 50-க்கும் மேற்பட்டோருடன் ஐக்கியம்....!!!
பாமக கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே தன்னுடைய மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றசாட்டுகளை முன்வைத்ததோடு அவர் தன்னுடைய தாயை கூட அடிக்க துணிந்தவர் என்று கூறியுள்ளார்.
நேற்று(05-06-2025) அன்புமணி மற்றும் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பாமக கட்சியின் தலைவர் நான் தான் என ராமதாஸ் கூறும் நிலையில் அன்புமணியோ நான்தான் கட்சியின் தலைவர் என்கிறார். இதன் காரணமாக தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது பாமக கட்சியின் இளைஞர் அணி துணைச் செயலாளர் ஆர் அசோகன் திடீரென பாமக கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
அவர் பர்கூர் திமுக எம்எல்ஏ மதியழகன் தலைமையில் திமுகவில் தற்போது இணைந்தார். அதோடு 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். வருக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும் தற்போது பாமகவில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் முக்கிய கட்சியின் நிர்வாகி ஒருவர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட நிருபர் .கோகுல்குமார் .
கருத்துகள்
கருத்துரையிடுக