லஞ்ச வேட்டையில் சிக்கிய மாமன்னன் ஜஹாங்கிர்க்கு உடனடி பணி..!!
லஞ்சத்தில் சிக்கிய ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாஷாவை பத்தே நாட்களில் பதவி போட்டது ஏன்....?
ஊட்டி நகராட்சி ஆணையராக இருந்த லஞ்ச மன்னன் ஜஹாங்கிர் பாஷா காரில் செல்லும்போது லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்து அவரிடம் இருந்து 11 லட்சத்து 70 ஆயிரம் லஞ்ச பணத்தை கைப்பற்றியது.
அப்படி கையும் கலுவுமாக பிடிபட்ட ஜஹாங்கிர் பாஷாவை நகராட்சி நிர்வாக ஆணையர் சிவராசு ஐஏஎஸ் அவர்கள் 13 ம் தேதி ஜஹாங்கிர் பாஷாவை ஊட்டி நகராட்சியில் இருந்து காத்திருப்பு பட்டியலுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் 10 நாட்கள் முடிந்த நிலையில் நேற்று (26-11-2024) அன்று ஜஹாங்கிர் பாஷாவை திருநெல்வேலி மாநகராட்சிக்கு பணியிட உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
லஞ்சம் வாங்கி சிக்கிய ஜஹாங்கிர் பாஷாவை 20 நாட்கள் கூட முடியாத நிலையில் உடனடியாக உத்தரவு பிறப்பித்ததால் இதுதான் துறை ரீதியான நடவடிக்கையா என்கின்றனர் மக்கள்.
உடனடியாக பணி அமர்த்தப்பட்ட லஞ்ச வேட்டை மாமன்னன் ஜஹாங்கிர்க்கு அரசியல் ரீதியாக பல்வேறு அமைச்சர்கள் கையில் இருப்பதை உணர முடிகிறது.
துறை ரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் குறுகிய நாட்களிலே பணி மாறுதல் மட்டும் அளித்தால் அங்கே சென்று எந்த லஞ்சமும் பெறாமல் உத்தமராக பணி செய்வாரா , அதுமட்டுமின்றி லஞ்சத்தில் சிக்கிய மற்றவர்களுக்கு ஒரு நீதி ஜஹாங்கிர் பாஷாவுக்கு ஒரு நீதியா என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
நிர்வாக ஆசிரியர்.எம்.ராஜ சேகர்
தென்னிலை கதிர் மாதம்இரு முறை. RNI/TNTAM/2022/85265
9445272820,7904654776,98847993



கருத்துகள்
கருத்துரையிடுக