தென்னிலை கதிர் ஆசிரியர் மீது பொய் புகார் அளித்த நிருபர்களுக்கு தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜி ஜி சிவா கண்டனம்.

தென்னிலை கதிர் ஆசிரியர் மீது பொய் புகார் அளித்த கட்டிங், வசூல் பத்திரிகையாளர்களுக்கு தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜி ஜி சிவா கண்டனம்.
தேசிய முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை கூறியிருப்பதாவது,

ஊத்தங்கரையில் இயங்கி வரும் RD அக்ரோவைப் பற்றி தென்னிலை கதிர் பத்திரிகை அந்நிறுவனத்தில் நடக்கும் குறைபாடுகளை போஸ்டர் மூலமாகவும்,நேரடியாக மக்களின் குறைகளை கேட்டு தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்திருக்கிறது.

அக்ரோ நிறுவனத்தில் அங்கே வாழக்கூடிய மக்களுக்கு எதிராக பல அநீதிகளை இழுந்து வந்ததும் அந்நிறுவனத்தால் பொதுமக்களுக்கு பேராபத்து ஏற்படக் கூடிய வகையில் இருப்பதனாலும் தென்னிலை கதிரின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளர் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து மக்கள் பணி செய்து வரும் தமிழன் வடிவேல் அவர்கள் மீது உள்ளூரில் உள்ள சில பத்திரிகையாளர்கள் என்கின்ற போர்வையில் பயணிக்கும் ஒரு சாராரின் உண்மை நிலவரங்களை மக்கள் மத்தியில் கொண்டு வந்த தென்னிலை கதிர் பத்திரிகையின் செயல்பாடுகளை தாங்கிக்கொள்ள முடியாத பண முதலை படைத்த கோபி என்பவர் மாதம் மாதம் கட்டிங் கொடுக்கும் நிருபர்களை வைத்து தென்னிலை கதிர் மீது ஊத்தங்கரை காவல் நிலையத்தில் தவறான, பொய்யான புகாரை வழங்கியது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான செயலாகும்.இப்பேற்பட்ட கட்டிங், வசூல் பத்திரிகையாளர்களின் நிலைப்பாட்டின் காரணமாக தான் பொதுமக்கள் மத்தியில் பத்திரிகையாளர்கள் மீது இருக்கும் நம்பிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

 ஒரு மூத்த பத்திரிகையாளருக்கு இந்த நிலைமை என்றால் மற்றவர்களுக்கு இந்த கட்டிங், வசூல் பத்திரிகையாளர்கள் மூலமாக எப்பேர்பட்ட அச்சுறுத்துக்கள் ஏற்படும் என்பதனை தமிழ்நாடு அரசும் தமிழக காவல்துறையும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

RD அக்ரோ நிறுவனர் கோபியை தென்னிலை கதிர் ஆசிரியர் பார்த்ததும் இல்லை, தொடர்பு கொண்டதுமில்லை அப்படி இருக்கும்பட்சத்தில், உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்கும் நிருபர்கள் என்ற பெயரில் கையேந்தி நிற்கும் அதுப்போன்ற நபர்களால் தான் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களின் உண்மை எழுத்துக்கள் வலிமை இல்லாமல் போய்க்கொண்டு உள்ளது.

தென்னிலை கதிர் புலனாய்வு இதழ் எதை கண்டும் அஞ்சுவது இல்லை, எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ளக்கூடிய பக்குவம் கொண்டவர் என்பதனை தொடர்ந்து பல வருடங்களாக பத்திரிகை துறையைச் சார்ந்தவர்களும்,பொது மக்களும் கண்கூட பார்த்து வருகிறார்கள்.

உடனுக்குடன் புகார் கொடுத்த பத்திரிகையாளர்களும் நிறுவனத்தின் முதலாளி கோபி என்பவரும் புகாரை வாபஸ் பெற்று மூத்த பத்திரிகையாளரும், தென்னிலை கதிர் ஆசிரியருமான தமிழன் வடிவேல் அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கூற வேண்டும் இதே போன்ற தொடர்ந்தால் தமிழ்நாடு முழுக்க இருக்கும் பத்திரிகையாளர்களை ஒன்று திரட்டி தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கப்படும் எனவும் இந்த வசூல் பத்திரிகையாளர்களை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைமையின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

 உடனுக்குடன் அந்த வசூல் பத்திரிகையாளர்களை விசாரணை செய்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என கோரிக்கயும் முன் வைக்க கடமைப்பட்டுள்ளேன் என ஜி ஜி சிவா கண்டன அறிக்கை குறிப்பிட்டு இருக்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சென்னையில் 13 வயது சிறுமியிடம் காவலர் அத்துமீறிய கொடுமை..! போலீஸ் கார், பூத்தில் நடந்த துயரம்...!

தென்னிலை கதிர் செய்தியால் மாதமாதம் மாமூல் போச்சேன்னு புகார் கொடுத்த ஊத்தங்கரை நிருபர்கள்....?