குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு..? இரவு 11 மணிக்கு டேங்க் மீது 2 பேர்.....!

 திருப்பூரில் அடுத்த அதிர்ச்சி..! குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு..? இரவு 11 மணிக்கு டேங்க் மீது 2 பேர்.....!


திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 6வது வார்டு கவுண்டநாயக்கன்பாளையத்தில் 17.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்ததாக வந்த தகவலால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தகவல் காட்டுத்தீயாய் பரவியதால், ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்துவிட்டனர்.. இதையடுத்து, அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள்.

திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டு கவுண்டன்நாயக்கன்பாளையம் பகுதியில், 17 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 அடி உயர குடிநீர் தொட்டி கட்டப்பட்டு, பயன்பாட்டிலும் இருந்து வருகிறது. இங்கு 2 காவலாளிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.. திருப்பூர் மாநகராட்சி சார்பில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் இந்த குடிதொட்டி கட்டப்பட்டது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு தொட்டியின் உச்சியில் சிலர் உட்கார்ந்திருந்தனர்.. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்களில் சிலர், தொட்டியின் மேல் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பால் பாக்கெட், செய்தித்தாள்கள் கிடந்திருக்கின்றன.. ஆனால், பொதுமக்களை பார்த்ததும் அந்த இளைஞர்கள் தப்பியோடி விட்டனர்..

இதுகுறித்து பொதுமக்கள் சிலர், திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.. அந்த மர்ம நபர்கள், தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாகவும் பொதுமக்கள் புகார் சொன்னார்கள்.

அதற்குள் குடிநீர் தொட்டியில் மலம் கலந்து விட்டதாக அப்பகுதியினர் மத்தியில் தகவல் பரவியது. இதனால், பொதுமக்கள் அங்கு திரண்டு சென்றனர்.இதையடுத்து, போலீசாரும் விரைந்து வந்தனர்.. மாநகராட்சி இரண்டாவது மண்டலக்குழு தலைவர் கோவிந்தராஜ், வார்டு கவுன்சிலர் கோபால்சாமி ஆகியோர், மேல்நிலைத் தொட்டி வளாகத்தை பார்வையிட்டனர்.

எனினும், பொதுமக்களுக்கு தொட்டியிலுள்ள நீர்குறித்து சந்தேகம் வலுத்தது.. எனவே, குடிநீர் தொட்டி பகுதியை ஆய்வு செய்துவிட்டு, தொட்டியில் இருந்த தண்ணீரை மண்டலத் தலைவர் கோவிந்தராஜ், பொதுமக்கள் முன்னிலையிலேயே குடித்து காண்பித்தார்... ஆனாலும், பொதுமக்கள் தொடர்ந்து ஏற்க மறுத்தனர்.

எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீர் தொட்டியை முழுமையாக சுத்தம் செய்தனர். தொட்டியிலிருந்த குடிநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு, மீண்டும் நிரப்பப்பட்டது. அந்த குடிநீரை, மண்டல தலைவர் மற்றும் கவுன்சிலர் பொதுமக்கள் முன்னிலையில், பருகி, குடிநீரில் மலம் கலக்கவில்லை என்று உறுதிப்படுத்தினார்கள்.. அதற்கு பிறகே பொதுமக்கள் அமைதியானார்கள்.

இது தொடர்பாக போலீஸார் சொல்லும்போது, "திருப்பூர் நெருப்பெரிச்சலை சேர்ந்த நிஷாந்த் (19) மற்றும் திருமுருகன்பூண்டியை சேர்ந்த சஞ்சய் (22) 2 பேருமே நண்பர்கள். திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகின்றனர். சம்பளம் கொடுப்பதாக கூறி கவுண்டநாயக்கன்பாளையத்திற்கு வரச் சொன்னதாகவும், இங்கு வந்து அழைத்தபோது குடிநீர் தொட்டிக்கு வரச் சொன்னதாகவும் தெரிவித்தனர்..

அப்போது தண்ணீர் தொட்டி மேல் உட்கார்ந்து மது அருந்தியிருக்கிறார்கள்.. இதையடுத்து பொதுச்சொத்தை சேதப்படுத்துதல் பிரிவின் கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 30 அடி தண்ணீர் தொட்டியின் மீது அபாயகரமாக உட்கார்ந்து மது அருந்தியதால், அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.. ஆனால், மனிதக் கழிவு எதுவும் தண்ணீர் தொட்டியில் கலக்கவில்லை" என்றனர்.

இதனிடையே, சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தவிர்க்க மேல்நிலைத் தொட்டி வளாகத்தில் வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.. இதையடுத்து, பொதுமக்களிடம் பேசிய மண்டல தலைவர், "தொட்டி உள்ள இடத்தில் புதர்களை அகற்றி சுத்தம் செய்யப்படும். சுற்றுச்சுவர் அமைத்து தொட்டிக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்படும்" என்று உறுதி தந்தார்.. இதையடுத்து, மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

                                              மாவட்ட நிருபர் .செல்வகுமார் .


தென்னிலை கதிர் மாதம்இரு முறைRNI/TNTAM/2022/85265

 
செய்திதாள்கள் மற்றும் தொலைக்காட்சி குழுமம் -thennilaikathir@gmai


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டாள் கோவிலில் அவமதிப்பு...!!

சென்னையில் 13 வயது சிறுமியிடம் காவலர் அத்துமீறிய கொடுமை..! போலீஸ் கார், பூத்தில் நடந்த துயரம்...!

லஞ்ச வேட்டையில் சிக்கிய மாமன்னன் ஜஹாங்கிர்க்கு உடனடி பணி..!!